பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு முக முடக்கு வாத அறுவை சிகிச்சை: 9 ஆண்டாகியும் மீளாத துயரத்தால் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு முக முடக்கு வாத அறுவை சிகிச்சை: 9 ஆண்டாகியும் மீளாத துயரத்தால் மருத்துவமனையில் அனுமதி

பாஸ்டன்: பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட மலாலாவுக்கு, முக முடக்கு வாத அறுவை சிகிச்சைக்காக பாஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் என்ற மாணவி கடந்த 9  ஆண்டுகளுக்கு முன் பள்ளிப் படிப்பை படித்துக் கொண்டிருந்தார். 2012ம் ஆண்டு  அவரை பள்ளிக்கு செல்லக் கூடாது என்று வழிமறித்து தலிபான் தீவிரவாதிகள்  அச்சுறுத்தினர்.

இருந்தும், மலாலா மாணவியாக இருந்த போது, தலிபான்களின்  உத்தரவுக்கு இணங்காமல் பள்ளிக்கு ெசல்வேன் என்று தைரியமாக கூறினார்.   அதனால், மலாலாவை தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர். அதில், அவருக்கு  தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். பின்னர்,  பாகிஸ்தானில் இருந்து வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.

தற்போது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இதற்கிடையே, உலகின் உயரிய விருதான நோபல் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது.

அமைதிக்கான விருதாக, இவ்விருது வழங்கப்பட்டது. சர்வதேச புகழ்பெற்ற மாணவியாக உருவெடுத்த மலாலா, தொடர்ந்து பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் அவ்வப்போது குரல்களை எழுப்பி வருவார்.

ஆப்கான் சம்பவங்கள் தொடர்பாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் தனது கவலைகளை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ‘ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால்,  அங்கு வாழும் பெண்கள் மேலும் துன்பங்களை அனுபவிப்பர்.

கடந்த ஒன்பது  ஆண்டுகளுக்கு பிறகும் நான் மீளவில்லை. ஆப்கானிஸ்தான் மக்கள் கடந்த 40  ஆண்டுகளாக லட்சக்கணக்கான தோட்டாக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உதவி  கேட்பவர்களை பார்த்து, என் இதயம் ஏங்குகிறது.

ஆனால் அவர்களுக்கு என்னால்  உதவ முடியவில்லை.

அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை’ என்று கவலையுடன்  தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் மலாலா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 9 ஆண்டுக்கு முன் தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டதால், அவருக்கு முக முடக்கவாத பாதிப்பு இருந்தது. தற்போது, அதனால் இணை பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதால், முக முடக்கு வாத அறுவை சிகிச்சைக்காக மலாலா அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அவரை மருத்துவர்கள் கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை