எல்லை மோதல் அசாம், மிசோரம் அரசு இன்று பேச்சுவார்த்தை

தினகரன்  தினகரன்
எல்லை மோதல் அசாம், மிசோரம் அரசு இன்று பேச்சுவார்த்தை

அய்ஸ்வால்: அசாம், மிசோரம் மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக எல்லை மோதல் நீடித்து வருகிறது. கடந்த 26ம் தேதி இரு மாநில போலீசாருக்கு இடையே வெடித்த வன்முறையில், அசாமை சேர்ந்த 6 போலீசார் உட்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, போலீஸ் அதிகாரிகள் மீது மிசோரம் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பதிலுக்கு, மிசோரம் எம்பி வன்லால்வினா, அரசு அதிகாரிகள் மீது அசாம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில்,எல்லை பிரச்னையை தீர்க்க இரு மாநில முதல்வர்களும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், இரு மாநிலங்களிலும் வன்முறை தொடர்பாக பதிந்த வழக்குகளை திரும்ப பெற ஒப்புக் கொண்டுள்ளனர். அதன்படி, மிசோரம் மாநில உள்துறை அமைச்சர் லால்சாம்லியானா, நில வருவாய் மற்றும் தீர்வுத்துறை அமைச்சர் லால்ருத்கிமா மற்றும் உள்துறை துறை செயலாளர் வனலங்காய்சாகா ஆகியோரும், அசாமி சார்பில் அமைச்சர்கள் அதுல் போரா மற்றும் அசோக் சிங்கால் ஆகியோரும் இன்று காலை 11 மணிக்கு எல்லையில் உள்ள ஐஜல் கிளப்பில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

மூலக்கதை