வெண்கலம் வென்றது இந்திய ஹாக்கி அணி ; ஒலிம்பிக்கில் பதக்கம் 4

தினமலர்  தினமலர்
வெண்கலம் வென்றது இந்திய ஹாக்கி அணி ; ஒலிம்பிக்கில் பதக்கம் 4

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பின்னர் வெண்கலம் வென்றது.

வெண்கல பதக்கத்திற்காக நடந்த போட்டியில், இந்தியா, ஜெர்மனியை எதிர்கொண்டது. கடைசி வரை பரபரப்பாக போட்டி நடந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா 3 கோல் போட்டன. ஆட்ட இறுதியில் இந்திய அணி 5-4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று பதக்கத்தை கைப்பற்றியது.


கடந்த 1980 ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது வெண்கல பதக்கம் வென்றது. இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் தற்போது வரை இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது.

மூலக்கதை