ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது : பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் புகழாரம்!!

தினகரன்  தினகரன்
ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது : பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் புகழாரம்!!

டோக்கியோ : ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்த இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வெண்கல பதக்கத்தை இந்தியா கைப்பற்றியது.ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்றுள்ளது. கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி பதக்கம் வென்றது. அதைத் தொடர்ந்து, இந்திய ஆடவர் ஹாக்கி அணி 12வது பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை 8 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் வென்றுள்ளது ஹாக்கி அணி.ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்த இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆண்கள் ஹாக்கி அணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்த வாழ்த்துச் செய்தி\'வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டம்.41 ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்தது. ஆண்கள் ஹாக்கியில் 12-ஆவது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றிருக்கும் இந்திய ஹாக்கி அணிக்கு எனது பாராட்டுகள். இந்த வெற்றியுடன் இந்திய ஹாக்கி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று உறுதியாக நம்புகிறேன்,\'இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். *இதே போல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், \'வரலாறு, ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் நாள். வெண்கலத்தை வென்ற எங்கள் ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த தேசத்தின் குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது!!,\' என தெரிவித்துள்ளார். *ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்திய ஆடவர் ஆக்கி அணி பெற்ற வெற்றி ஆக்கியில் புதிய சகாப்தத்தை உருவாக்கி உள்ளது. விளையாட்டில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய அணியின் வெற்றி உந்து சக்தியாக இருக்கும் என்றார்.

மூலக்கதை