டெல்லியில் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த சிறுமியே பெற்றோர் புகைப்படத்தை ராகுல் காந்தி வெளியிட்டதற்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு எதிர்ப்பு

தினகரன்  தினகரன்
டெல்லியில் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த சிறுமியே பெற்றோர் புகைப்படத்தை ராகுல் காந்தி வெளியிட்டதற்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு எதிர்ப்பு

டெல்லி: டெல்லியில் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த சிறுமியே பெற்றோர் புகைப்படத்தை ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதற்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுடுகாட்டிற்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்த 9 வயது சிறுமி அங்குள்ள தொட்டியில் குடிநீர் எடுக்க சென்ற போது தகனமேடை ஊழியர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்தார். தகவல் அறிந்த ராகுல் காந்தி சிறுமியின்  குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த பிறகு சிறுமியின் பெற்றோருடன் தன இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் குறைதீர்ப்பு அதிகாரிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கவுன்சில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ராகுல்காந்தி வெளியிட்டிருப்பது இளம் சிறார் நீதி சட்டத்தையும் போக்சோ சட்டத்தையும் மீறிய செயல் ஆகும் என்று கூறியுள்ளது. இதன் மூலம் அந்த சிறுமியின் அடையாளத்தை ராகுல்காந்தி  தெரியப்படுத்திருக்கிறார் என்று கூறியுள்ளது.  ஆகவே ராகுல்காந்தியின் டிவிட்டர் பதிவை நீக்கவேண்டும். மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான அறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

மூலக்கதை