சிறப்பு அந்தஸ்து ரத்து பயனற்றது; குப்கர் கூட்டணி அறிவிப்பு

தினமலர்  தினமலர்
சிறப்பு அந்தஸ்து ரத்து பயனற்றது; குப்கர் கூட்டணி அறிவிப்பு

ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் 'இந்த நடவடிக்கை பயனற்றது என்பதை மத்திய அரசு உணர்ந்திருக்கும்' என ஜம்மு - காஷ்மீர் எதிர்க்கட்சிகள் அடங்கிய குப்கர் கூட்டணி தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019 ஆக. 5ல் நீக்கப்பட்டது. மேலும் மாநிலம் ஜம்மு - காஷ்மீர் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதன் இரண்டாவது ஆண்டையொட்டி ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் அடங்கிய குப்கர் கூட்டணி விடுத்துள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளாகிறது. மத்திய அரசு சிறப்பு அந்தஸ்தை நீக்கி தன் அனைத்து எல்லைகளையும் மீறியுள்ளது.

தனக்குள்ள அதிகாரத்தை காட்டுவதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்த மாநிலத்தையும் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றும் அபாயம் உள்ளது.சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் மாநிலத்தின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. மக்கள் வேலைவாய்ப்பை தொழிலை இழந்துள்ளனர். இன்னும் பலர் சிறையில் உள்ளனர். சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவதற்கு அனைத்து சட்ட வழிகளையும் எடுத்து வருகிறோம்.


அதனால் மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சிறப்பு அந்தஸ்தை நீக்கியபோது புதிய காஷ்மீரை உருவாக்குவோம் என கூறினார்கள். ஆனால் அது ஒரு 'ஜோக்' ஆகவே உள்ளது.தன் நடவடிக்கை பயனற்றது என்பதை இந்த இரண்டாண்டில் மத்திய அரசு உணர்ந்துஇருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை