இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி: மல்யுத்தம் பைனலில் ரவிக்குமார்

தினமலர்  தினமலர்
இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி: மல்யுத்தம் பைனலில் ரவிக்குமார்

டோக்கியோ: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ரவிகுமார் தாஹியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம், இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை ரவிக்குமார் உறுதி செய்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. 12வது நாளான இன்று (ஆக.,04) மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா, கொலம்பியா வீரரை எதிர்கொண்டார். இதில், 13-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப்பெற்றார். காலிறுதியில் பல்கேரியா வீரருடன் மோதியதில் 14-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

பைனலில் ரவிக்குமார்

இதனை தொடர்ந்து நடந்த அரையிறுதி போட்டியில், 57 கிலோ பிரி ஸ்டைல் பிரிவில், ரவிக்குமார் தாஹியா, நுரிஸ்லாம் சனாயேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதன் மூலம் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.



மல்யுத்தத்தில் 86 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு இந்திய வீரர் தீபக் புனியா, நைஜீரிய வீரரை 12-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி எளிதாக காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் சீன வீரருடன் மோதிய தீபக் புனியா 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வென்றதுடன் அரையிறுதிக்கு முன்னேறினார்.

மூலக்கதை