சேவைகள் துறை வளர்ச்சி ஜூலையில் சரிவு

தினமலர்  தினமலர்
சேவைகள் துறை வளர்ச்சி ஜூலையில் சரிவு

புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறையின் வளர்ச்சி, கடந்த ஜூலை மாதத்தில் குறைந்து உள்ளது என, ‘ஐ.எச்.எஸ்.,மார்க்கிட் இந்தியா’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம், கடந்த ஜூலை மாதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டின் சேவைகள் துறையின் வளர்ச்சி, தொடர்ந்து மூன்று மாதங்களாக குறைந்து உள்ளது.

ஜூலை மாதத்தில் இத்துறையின் வளர்ச்சியை குறிக்கும் குறியீடு, 45.4 புள்ளிகளாக உள்ளது. இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். கடந்த ஜூன் மாதத்தில் இக்குறியீடு, 41.2 புள்ளிகளாக இருந்தது.கொரோனா தாக்கம் காரணமாக தேவைகள் குறைந்ததால் இந்த சரிவு ஏற்பட்டுஉள்ளது.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

மூலக்கதை