'ஹார்பூன்' ஏவுகணை சோதனை இயந்திரம் : இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா சம்மதம்

தினமலர்  தினமலர்
ஹார்பூன் ஏவுகணை சோதனை இயந்திரம் : இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா சம்மதம்

வாஷிங்டன்: கப்பல் எதிர்ப்பு 'ஹார்பூன்' ஏவுகணை சோதனை இயந்திரம் உள்ளிட்ட தளவாடங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்க ராணுவம் ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க ராணுவத்தில் 1977ல் சேர்க்கப்பட்ட ஹார்பூன் ஏவுகணை, எத்தகைய தட்ப வெப்பத்திலும், மிகக் குறைந்த உயரத்தில் பறந்து சென்று கப்பலை தாக்கி அழிக்கும் திறன் உடையது.இந்த ஏவுகணையின் ஒரு சோதனை இயந்திரம், பராமரிப்பு நிலையம், தளவாடங்கள், தொழில்நுட்ப ஆவணங்கள், பயிற்சி உதவி ஆகிவற்றை வழங்கும்படி அமெரிக்காவிடம் இந்தியா கோரியிருந்தது. இதன்படி 615 கோடி ரூபாய் மதிப்பிலான ஹார்பூன் ஏவுகணை சோதனை இயந்திரம், தளவாடங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க பார்லிக்கு., அந்நாட்டு ராணுவ பாதுகாப்பு கூட்டுறவு அமைப்பு வழங்கியுள்ளது.

இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியா - அமெரிக்கா ராணுவ கூட்டுறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹார்பூன் ஏவுகணை சோதனை இயந்திர விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும். அமெரிக்காவின் போயிங் நிறுவனம், ஹார்பூன் ஏவுகணைகளை தயாரிக்கிறது.

மூலக்கதை