ஜி.எஸ்.டி., வருவாய் 36 சதவீதம் உயர்வு

தினமலர்  தினமலர்
ஜி.எஸ்.டி., வருவாய் 36 சதவீதம் உயர்வு

சென்னை:தமிழகத்தில், ஜூலை மாத ஜி.எஸ்.டி., வருவாய் 6,302 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது; இது 2020ம் ஆண்டு ஜூலையை ஒப்பிடுகையில் 36 சதவீதம் அதிகம்.

இது குறித்து ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் பல மாதங்களாக ஜி.எஸ்.டி., வரி வருவாய் மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், ஜூலை மாத ஜி.எஸ்.டி., வருவாயும் உயர்ந்துள்ளது.ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் வருவாய் 6,302 கோடி ரூபாய். இது 2020 ஜூலையில் வசூலான 4,635 கோடி ரூபாயை விட 36 சதவீதம் அதிகம்.

புதுச்சேரி மாநிலத்தின் ஜி.எஸ்.டி., வரி வசூலில் 6 சதவீதம் சரிவு கண்டு 129 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது 2020 ஜூலையில் 136 கோடி ரூபாயாக இருந்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை