கிரீன் சேலஞ்ச் மரக்கன்றுகள் நட்டார் அமிதாப்

தினகரன்  தினகரன்
கிரீன் சேலஞ்ச் மரக்கன்றுகள் நட்டார் அமிதாப்

சென்னை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஐதராபாத்தில் மரக்கன்றுகளை நட்டார். பிரபலங்கள் பலர் மரக்கன்றுகளை நட்டு, அதை வேறு பிரபலங்களும் நடுவதற்கு கிரீன் சேலஞ்ச் விடுக்கிறார்கள். அந்த பாணியில், அமிதாப் பச்சனும் மரக்கன்றுகள் நட்டார். படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றுள்ள அவர், நாடாளுமன்ற உறுப்பினரான சந்தோஷ் தலைமையில் நேற்று மரக்கன்றுகளை நட்டார். பிறகு நடிகர் நாகார்ஜுனா, பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி பிலிம்ஸ் உள்பட 4 பேருக்கு அவர் கிரீன் சேலஞ்ச் விடுத்தார்.

மூலக்கதை