இரு மடங்கு பறிமுதல்: மல்லையா புலம்பல்

தினமலர்  தினமலர்
இரு மடங்கு பறிமுதல்: மல்லையா புலம்பல்

புதுடில்லி :''வங்கிகளில் நான் வாங்கிய கடனை விட இரு மடங்குக்கு மேல் என் சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது,'' என, தொழில் அதிபர் விஜய் மல்லையா புலம்பியுள்ளார்.கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 65. இவர் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பினார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா, ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இது குறித்து விஜய் மல்லையா கூறியுள்ளதாவது: நான் வாங்கிய 6,200 கோடி ரூபாய் கடனுக்காக இரு மடங்குக்கு மேலாக 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள என் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.அமலாக்கத் துறையிடம் பணத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்பதால் வங்கிகள் என்னை திவாலாகும்படி கோருகின்றன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை