கோவிட் 2ம் அலை காரணமாக இந்திய வளர்ச்சியை குறைத்து மதிப்பிட்ட ஐ.எம்.எப்

தினமலர்  தினமலர்
கோவிட் 2ம் அலை காரணமாக இந்திய வளர்ச்சியை குறைத்து மதிப்பிட்ட ஐ.எம்.எப்

வாஷிங்டன்: இந்தியாவில் தற்போது கோவிட் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன. இதனால் தொழில்கள் வழக்கம்போல இயங்கத் துவங்கிவிட்டன. சரிந்து உள்ள நாட்டின் பொருளாதாரம் மற்றும் மொத்த கொள்முதல் உற்பத்தியை மீட்டெடுக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் சர்வதேச நிதி அமைப்பு இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.இரண்டாம் அலை இந்தியாவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து உள்ளதாக இந்த அறிக்கையில் அந்த அமைப்பு கூறியுள்ளது. பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்ட நாடுகள் வைரஸ் தாக்கத்திலிருந்து வேகமாக மீண்டும் வருவதாக தெரிவித்த ஐஎம்எஃப், இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் எதிர்காலத்தில் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்று கூறியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் துவங்கி மேவரை இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளதாக ஜூன் மாதத்திலிருந்து சரிவில் இருந்து மீண்டு வருவதாகவும் கூறியுள்ளது.

9.5 சதவீத வளர்ச்சி12.5 சதவீத மொத்த கொள்முதல் உற்பத்தி வளர்ச்சியை இந்தியா இந்த ஆண்டு எட்டும் என ஐஎம்எஃப் பொருளாதார நிபுணர்கள் முன்னதாகக் கணித்தனர். ஆனால் 2ம் அலை இந்தியாவில் தீவிரம் அடைவதை ஒட்டி ஜூலை மாதத்தின் இறுதியில் 9.5 சதவீத வளர்ச்சியை மட்டுமே இந்தியா அடையும் எனக் கூறி தங்கள் கணிப்பை மாற்றி அறிக்கை வெளியுட்டுள்ளது ஐஎம்எஃப். அதே சமயத்தில் அடுத்த ஆண்டு வளர்ச்சி 1.6 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.


இந்தியா மட்டுமல்லாமல் இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வைரஸ் தாக்கம் பொருளாதாரத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது. வைரஸ் தாக்கம் குறைவாக உள்ள நாடுகளில் சரிந்த பொருளாதாரம் சீரடையும் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. தடுப்பு மருந்து விநியோகம் துரிதமாவதைப் பொறுத்தே பொருளாதாரம் எவ்வாறு இருக்கும் என்று கூறமுடியும் என ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.

மூலக்கதை