டில்லி வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

தினமலர்  தினமலர்
டில்லி வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

புதுடில்லி : அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கன், இரண்டு நாள் பயணமாக நேற்று டில்லி வந்தடைந்தார்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பின், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கன் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்.

நேற்று இரவு அவர் டில்லி வந்தடைந்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை இன்று சந்தித்து பேசுகிறார்.


இந்தியா - அமெரிக்க நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம், இந்தோ - பசிபிக் கூட்டுறவை விரிவுபடுத்துவது உள்ளிட்டவை குறித்து, இருநாட்டு தலைவர்களும் பேச்சு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டில்லியில் இருந்து புறப்படுவதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அமைச்சர் பிளின்கன் சந்தித்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை