போதை... வேண்டாமே, அந்த பாதை தலைமுறை வாழட்டும்! உணவு பாதுகாப்பு துறை, போலீசார் 'அட்வைஸ்'

தினமலர்  தினமலர்
போதை... வேண்டாமே, அந்த பாதை தலைமுறை வாழட்டும்! உணவு பாதுகாப்பு துறை, போலீசார் அட்வைஸ்

அவிநாசி:'குட்கா தரும் போதை, கொலை குற்றம் கூட செய்ய துாண்டுகிறது. சொற்ப வருமானத்துக்காக, தலைமுறையை சீரழிக்கும் போதை பொருளை விற்க வேண்டாம்,' என, வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.குட்கா உட்பட போதை வஸ்து விற்பனையை முற்றிலும் தவிர்ப்பது தொடர்பாக, அவிநாசியில் உள்ள வியாபாரிகளுடன், போலீசார் சார்பில் விழிப்புணர்வு கூட்டம், கங்கவர் திருமண மண்டபத்தில் நடந்தது.

அவிநாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமை வகித்து, பேசிய தாவது:வட மாநில இளைஞர்கள் தான் அதிகளவில் அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். சமீப நாட் களாக, நம் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் கூட, பயன்படுத்த துவங்கியுள்ளனர்.குட்கா உள்ளிட்ட போதை வஸ்து பயன்படுத்தி பழக்கப்பட்டுவிட்ட அவர்கள், கஞ்சா பயன்படுத்த துவங்குகின்றனர். அளவுக்கதிகமான போதையில், அடிதடி, கலாட்டா என அவர்களின் வாழ்க்கை திசை மாறுகிறது.

திருட்டு, வழிப்பறி கொள்ளை, கொலை செய்யும் அளவுக்கு கூட அவர்களின் மனநிலை மாறி விடுகிறது.எனவே, நம் சந்ததியின் எதிர்காலம் கருதி, வியாபாரிகள் குட்கா உள்ளிட்ட போதை வஸ்துவை விற்கக்கூடாது. புகையிலை பொருள் சப்ளை செய்வது குறித்த தகவலை, '100' என்ற எண்ணுக்கோ அல்லது நேரடியாகவோ போலீசாரிடம் தெரிவிக் கலாம். தகவல் தருவோர் பெயர், ரகசியம் காக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.மனசாட்சி வேண்டும்பல்லடத்தில் நடந்த கூட்டத்துக்கு,டி.எஸ்.பி., வெற்றிச்செல்வன் தலைமை வகித்தார்.

மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை பேசுகையில், 'விதிமுறை மீறி யாரேனும் விற்பனை செய்வது தெரிந்தால், 94440 42322 என்ற மொபைல் எண்ணுக்கு தெரியப்படுத்தலாம். புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்,' என்றார்.முன்னதாக, தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்ய மாட்டேன் என, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.விதிமுறை மீறி யாரேனும் விற்பனைசெய்வது தெரிந்தால், 94440 42322என்ற மொபைல் எண்ணுக்குதெரியப்படுத்தலாம். புகார் அளிப்பவரின்விவரங்கள் ரகசியம் காக்கப்படும்ஒரு பாக்கெட் என்றாலும்

கம்பி எண்ண வேண்டும்

போலீசார் கூறியதாவது:கடையில், ஒரு பாக்கெட் குட்கா விற்றாலும், கடைக்காரர்கள் மீது, வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து, புகையிலை பொருள் விற்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் சட்டத்தில் இடமுண்டு; அத்தகைய கடைகள் 'சீல்' வைக்கப்படும்.சில நுாறு ரூபாய் வருமானத்திற்கு ஆசைப்பட்டு வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடக்கூடாது. நாளை மாலைக்குள், எந்தவொரு கடைகளிலும் குட்கா விற்பனை செய்வது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்; அவ்வாறு, இருப்பு வைக்கப்பட்டி இருந்தாலும் அவற்றை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும், அல்லது அழித்து விட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

மூலக்கதை