க்ருணாலுக்கு கொரோனா இலங்கை - இந்தியா 2வது டி20 ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
க்ருணாலுக்கு கொரோனா இலங்கை  இந்தியா 2வது டி20 ஒத்திவைப்பு

கொழும்பு: இந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இலங்கை - இந்தியா இடையிலான 2வது டி20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.அடுத்து நடக்கும் டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா 38 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை வகிக்க, 2வது போட்டி நேற்று இரவு நடக்க இருந்தது. வீரர்கள் உட்பட அணியினர் ‘பயோ பபுள்’ உயிர் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டு இருந்தாலும், ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் கொரோனா பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதில் இந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் பெயரை  இலங்கை கிரிக்கெட் சங்கம் வெளியிடாவிட்டாலும், அது க்ருணால் பாண்டியா என்பது உறுதியாகி உள்ளது. தொற்று அறிகுறிகள் இல்லாவிட்டாலும் அவர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவக்  குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அவருடன் தொடர்பில் இருந்த வீரர்கள், ஊழியர்கள் உட்பட  மேலும் 10 பேருக்கு தொற்று இல்லை. ஆனாலும்  அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மீண்டும் சோதனை நடத்தப்படும். அதன் முடிவுக்கு ஏற்ப   நேற்று நடைபெறுவதாக இருந்த 2வது டி20 ஆட்டத்தை  இன்று நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மூலக்கதை