உடலில் நுழையும் வைரசை போல் காஷ்மீரில் வன்முறையை அழிக்க வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு

தினகரன்  தினகரன்
உடலில் நுழையும் வைரசை போல் காஷ்மீரில் வன்முறையை அழிக்க வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர், லடாக்கிற்கு 4 நாள் பயணமாக சென்றுள்ள    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீரின் காஷ்மீர் பல்கலைக் கழகத்தில் 19வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் நேற்று கலந்து கொண்டார். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் பேசியதாவது: பருவநிலை மாற்றமானது இந்த நூற்றாண்டில் மக்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளுக்கு இதுவே காரணம். காஷ்மீரின் ஒரு அங்கமாக இல்லாத வன்முறை, இப்போது தினசரி சம்பவமாக மாறிவிட்டது. காஷ்மீர் கலாசாரத்துக்கு வன்முறை விரோதமானது. இது தற்காலிகமானது தான். உடலில் புகுந்துவிடும் வைரசை அழிப்பது போல காஷ்மீரில் இருந்து வன்முறையை அழிக்க  வேண்டும். காஷ்மீர் இழந்த தனது பெருமையை பெறுவதற்கான புதிய தொடக்கமும், உறுதியான முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.  இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை