நாட்டின் பெயர், கொடி இல்லாமல் போட்டியில் பங்கேற்கும் ரஷ்யர்கள்

தினகரன்  தினகரன்
நாட்டின் பெயர், கொடி இல்லாமல் போட்டியில் பங்கேற்கும் ரஷ்யர்கள்

ரஷ்ய ஊக்க மருந்து தடுப்பு முகமை முறைகேட்டில்   சிக்கிய விவகாரத்தில்  ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடஉலக ஊக்க மருந்து  தடுப்பு முகமை(வாடா)  ரஷ்யாவுக்கு தடை விதித்தது. அதனால் ரஷ்யா நாடு,  ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. ஆனால் வீரர்கள், வீராங்கனைகளின் நலன் கருதி அவர்களை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதித்துள்ளனர். ஆனால் அவர்கள்  ரஷ்யன் ஒலிம்பிக் கமிட்டி(ஆர்ஓசி) சார்பில் பங்கேற்று உள்ளனர். அதனால்  அவர்கள்   ரஷ்யாவின் தேசிய கொடிக்கு பதிலாக, ரஷ்யன் ஒலிம்பிக் சங்கத்தின் கொடியை ஏந்தி அணிவகுப்பில் பங்கேற்றனர். அதேபோல் அவர்கள் வெற்றிப் பெறும்போது அரங்கில் ரஷ்ய கொடியை ஏற்றுவதோ, ரஷ்ய தேசிய கீதமோ ஒலிப்பதோ இருக்காது.  மேலும் அவர்கள் வெல்லும் பதக்கங்கள் ரஷ்ய நாட்டின் கணக்கில் வராது. கடந்தமுறை பிரேசிலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா  19தங்கம், 37 வெள்ளி,  38 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்தது.இந்த முறை  கைப்பந்து,கூடைப்பந்து,  ஹேண்ட்பால் குழு ஆட்டங்களிலும்,தடகளம்,  குத்துச்சண்டை,  வாள் வீச்சு, ஜிம்னாஸ்டிக்  என தனிநபர் பிரிவுகளிலும் மொத்தம்  337 ரஷ்யர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.

மூலக்கதை