இன்று இரவு 11.21க்கு பூமி அருகே வரும் பிரமாண்ட விண்கல்

தினகரன்  தினகரன்
இன்று இரவு 11.21க்கு பூமி அருகே வரும் பிரமாண்ட விண்கல்

புதுடெல்லி: விண்ணிலிருந்து அவ்வப்போது சிறிய அளவிலான விண்கற்கள் பூமியில் வந்து விழுகின்றன. இந்நிலையில், தாஜ்மகாலை விட 3 மடங்கு பெரிய அளவிலான விண்கல் பூமியை நோக்கி மணிக்கு 29,000 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் சமீபத்தில் தெரிவித்தனர். இது சராசரியாக வினாடிக்கு 8 கி.மீ வேகமாகும். இது குறித்து ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள பதானி சமந்தா கோளரங்கத்தின் துணை இயக்குநர் சுபேந்து பட்நாயக் கூறுகையில், ``இதற்கு முன்பு கடந்த 1935 மற்றும் 1977ம் ஆண்டுகளில் முறையே 19 லட்சம் கி.மீ மற்றும் 29 லட்சம் கி.மீ தொலைவில் விண்கற்கள் பூமியை கடந்துள்ளன. தற்போது, 2008 GO20 விண்கல் பூமியை 45 லட்சம் கி.மீ. தொலைவில் கடப்பதால் பயமோ, கவலையோ கொள்ள தேவையில்லை. இது பூமியை தாக்காது. இந்த விண்கல் இந்திய நேரப்படி, இன்றிரவு 11:21 மணிக்கு பூமிக்கு மிக அருகில் இருக்கும். இது, 97 மீட்டர் அகலமும் 230 மீட்டர் நீளமும் இருக்கும் என கணக்கிடப்பட்டு ள்ளது,’’ என்றார்.

மூலக்கதை