2.78 லட்சம் ேபருக்கு போலி துப்பாக்கி உரிமம் 40 இடங்களில் சிபிஐ சோதனை

தினகரன்  தினகரன்
2.78 லட்சம் ேபருக்கு போலி துப்பாக்கி உரிமம் 40 இடங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி உரிமம் வழங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகளின் வீடுகள் உட்பட, டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீரில் 40 இடங்களி்ல் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது, 2012 முதல் 2016ம் ஆண்டு வரையில்  4 லட்சத்து 49 ஆயிரம் பேருக்கு துப்பாக்கி பயன்படுத்தும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதில், 2.78 லட்சம் பேருக்கு போலி ஆவணங்களின் மூலம் உரிமம் வழங்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இவ்வாறு முறைகேடாக வழங்கப்பட்ட ஆயுதங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுகின்றன. இது பற்றி சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக டெல்லி, ஜம்மு காஷ்மீரில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்ட காலத்தில் குப்வாரா, பாரமுல்லா, உதாம்பூர், கிஸ்த்வார், சோபியான், ரஜோரி, தோடா, புல்வாமா மாவட்டங்களில் கலெக்டர்களாக இருந்தவர்களின் வீடுகள், 20க்கும் மேற்பட்ட துப்பாக்கி கிடங்குகள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தற்போது பழங்குடியினர் நலத்துறை செயலாளராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி சாகித் இக்பால் சவுத்ரி மற்றும் கூடுதல் செயலாளர் நீரஜ் குமார் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மூலக்கதை