முதுகெலும்பு இல்லாத சிறந்த அரசாங்கம்: ராகுல் காந்தி கடும் தாக்கு

தினகரன்  தினகரன்
முதுகெலும்பு இல்லாத சிறந்த அரசாங்கம்: ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி:  ஒன்றிய அரசின் தடுப்பூசி திட்டத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாநிலங்களவையில் அவர், நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி எப்போது கிடைக்கும்? என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பவார், ‘தடுப்பூசி வழங்குவதற்கு எந்த காலக்கெடுவும் இல்லை’ என்றார்.  முன்னதாக, 2021ம் ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு விடும் என்று அப்போதைய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட தலைவர்கள் உறுதி அளித்து வந்தனர். ஆனால், தற்போதைய இந்த பதிலால்  அரசின் உண்மை முகம் வெளிவந்து விட்டது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தடுப்பூசிக்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். ஆனால்,  எந்த இலக்கும் இல்லை என்பதை அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இது, முதுகெலும்பு இல்லாத சிறந்த அரசாங்கம்,’ என்று  கூறியுள்ளார். இத்துடன், ‘தடுப்பூசி எங்கே என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.

மூலக்கதை