காஸ் சிலிண்டர் வெடித்து 9 பேர் பரிதாப பலி

தினகரன்  தினகரன்
காஸ் சிலிண்டர் வெடித்து 9 பேர் பரிதாப பலி

அகமதாபாத்: குஜராத் மாநிலம், அகமதாபாத் புறநகர் பகுதியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த செவ்வாய்கிழமை பணி முடிந்த பிறகு இரவு உணவு அருந்தி விட்டு அவர்கள் வீட்டில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, காஸ் சிலிண்டர் கசிந்து துர்நாற்றம் வீசியது. இதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர், வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களிடம் கதவைத் தட்டி தகவல் தெரிவித்தனர். அப்போது, தூக்கத்தில் இருந்து எழுந்த ஒருவர் லைட்டை போடுவதற்கு சுவிட்சை ஆன் செய்ததும், காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், குழந்தைகள், பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஇவர் களில் குழந்தைகள் உள்பட மொத்தம் 9 பேர் பரிதா பமாக உயிரிழந்தனர்.

மூலக்கதை