ராகவேந்திரா கோயிலில் அடாவடி விஐபி.க்களை மட்டும் தரிசிக்க அனுமதிப்பதா?..தட்டிக் கேட்ட பக்தருக்கு கட்டை அடி

தினகரன்  தினகரன்
ராகவேந்திரா கோயிலில் அடாவடி விஐபி.க்களை மட்டும் தரிசிக்க அனுமதிப்பதா?..தட்டிக் கேட்ட பக்தருக்கு கட்டை அடி

திருமலை: ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் மந்திராலயத்தில் புகழ் பெற்ற ராகவேந்திரா சுவாமி மடம் உள்ளது. இங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர். நேற்றும் கோயிலுக்கு பக்தர்கள் வந்தனர். அப்போது, வரிசையில் நின்றிருந்த சாதாரண பக்தர்களை நீண்ட நேரமாகியும் தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களையும்,  முக்கிய பிரமுகர்களையும் மட்டும் தரிசனத்திற்கு அனுப்பி வந்தனர். இதனால், வரிசையில் காத்திருந்த சாதாரண பக்தர்கள் ‘விஐபிக்களை மட்டுமே தரிசனத்துக்கு தொடர்ந்து அனுமதிப்பது எந்த விதத்தில் நியாயம்?’ என்று கேட்டனர். ஒரு பக்தர் பாதுகாப்பு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார். அவரை பாதுகாப்பு ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்டையால் சுற்றிவளைத்து தாக்கி மடத்தில் இருந்து விரட்டினர்.

மூலக்கதை