ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் டிஜிட்டல் இந்தியா விற்பனை சலுகை

தினகரன்  தினகரன்
ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் டிஜிட்டல் இந்தியா விற்பனை சலுகை

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் விற்பனை சலுகையான ரிலையன்ஸ் டிஜிட்டல் வழங்கும் ‘டிஜிட்டல் இந்தியா விற்பனை சலுகை’ நாளை (ஜூலை 26) துவங்குகிறது. அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் மை ஜியோ ஸ்டோர்கள் மற்றும் www.reliancedigital.in என்ற இணையதளத்தில் இச்சலுகை நேரலையில் வழங்கப்படும். ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 5 வரை தொலைக்காட்சிகள், வீட்டு உபயோக பொருட்கள், மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் உபரி பாகங்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் சிறப்புச் சலுகைகள் கிடைக்கின்றன. ஸ்மார்ட்போன் பிரிவில், தள்ளுபடிகள் மற்றும் கவர்ச்சிகரமான கேஷ் பேக்குகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். மெல்லிய மற்றும் இலகு எடை கொண்ட லேப்டாப்களை ரூ.16,999க்கு வாங்கலாம். இச்சலுகை ஜூலை 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மட்டுமே அமலில் இருக்கும்.பிற எலக்ட்ரானிக் பொருட்களிலும் பலவிதமான அற்புதமான சலுகைகளில் கிடைக்கின்றன. 32” ஸ்மார்ட் டிவிகள் ரூ.12,990க்கு கிடைக்கிறது. ரூ.1,999 மதிப்புள்ள இலவசப் பொருட்களுடன் டைரக்ட்-கூல் ரெப்ரிஜிரேட்டர்கள் ரூ.11,990க்கும், டாப்-லோடு வாஷிங் மெஷின்கள் ரூ.13,290க்கும் கிடைக்கின்றன.வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள ஸ்டோர்களிலிருந்து இன்ஸ்டா டெலிவரி * (3 மணி நேரத்திற்குள் டெலிவரி) மற்றும் ஸ்டோர் பிக்-அப்* விருப்பங்களை தேர்வு செய்யலாம். வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து ஸ்டோர்கள் மற்றும் டெலிவரி பார்ட்னர்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுவார்கள்.

மூலக்கதை