அன்னிய முதலீடு அதிகரிக்கும் பியுஷ் கோயல் நம்பிக்கை

தினமலர்  தினமலர்
அன்னிய முதலீடு அதிகரிக்கும் பியுஷ் கோயல் நம்பிக்கை

புதுடில்லி:இந்தியா, தொடர்ந்து அன்னிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக, மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளார்.

கடந்த 2020ல், கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில், உலகெங்கிலும் முதலீடுகள் சரிவடைந்திருந்தன. இருப்பினும் அத்தகைய காலகட்டத்திலும், இந்தியா மிக அதிக அளவிலான அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்தது.கடந்த நிதியாண்டில், இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு, 19 சதவீதம் அதிகரித்தது.நடப்பு ஆண்டிலும், நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

தொடர்ந்து ஏழாவது ஆண்டாக, இந்த ஆண்டிலும், அன்னிய நேரடி முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.முதலீடுகள் மட்டுமின்றி; நாட்டின் ஏற்றுமதியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் இறுதியில், ஏற்றுமதி 30 லட்சம் கோடி ரூபாயை எட்டும். தற்போது, இந்தியா 16 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேச்சு நடத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை