சுந்தர்.சி படத்தில் இணைந்த தன்யா ஹோப்

தினமலர்  தினமலர்
சுந்தர்.சி படத்தில் இணைந்த தன்யா ஹோப்

ஒருபக்கம் தான் இயக்கியுள்ள அரண்மனை-3 படத்தின் ரிலீஸ் வேலைகளை முடுக்கிவிட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் கட்டாப்பாவை காணோம் படத்தை இயக்கிய மணி செய்யோன் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார் சுந்தர்.சி. இந்தப்படத்தில் கதாநாயகிகளாக ஹெபா படேல் மற்றும் சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தநிலையில் தடம் மற்றும் தாராள பிரபு ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த தன்யா ஹோப்பும் இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே விமலுடன் குலசாமி படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை