'விக்ரம்' படப்பிடிப்பில் இணைந்த பஹத் பாசில்

தினமலர்  தினமலர்
விக்ரம் படப்பிடிப்பில் இணைந்த பஹத் பாசில்

'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமானது. முதல் நாள் படப்பிடிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டு நடித்தனர். படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பஹத் பாசில் தெலுங்கில் நடிக்கும் 'புஷ்பா' படத்தின் படப்பிடிப்பில் அப்போது நடித்துக் கொண்டிருந்தார். அதனால், அவர் 'விக்ரம்' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிற்கும் வர முடியவில்லை.

இன்று முதல் அவர் அப்படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சற்று முன் கமல்ஹாசனுடன் இருக்கும் செல்பி புகைப்படத்தைப் பகிர்ந்து 'விக்ரம்' என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். கமலுடன் நடிப்பது எவ்வளவு பெருமையாக அவர் உணர்கிறார் என்பதை அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' படத்தில் வில்லனாக நடித்தபின் தமிழில் பகத் பாசில் அடுத்து நடிக்கும் படம் 'விக்ரம்'.

மூலக்கதை