யானைகள் வழித்தடம் மற்றும் அவற்றின் வாழ்விடத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

தினகரன்  தினகரன்
யானைகள் வழித்தடம் மற்றும் அவற்றின் வாழ்விடத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: யானைகள் வழித்தடம் மற்றும் அவற்றின் வாழ்விடத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. கோவை மலை அடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் அறிக்கை அளிக்க தமிழக அரசு அவகாசம் கேட்டதை அடுத்து விசாரணை செப்.2-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை