காயம் ஏற்படுத்தும் மாயம்: கோலி தலைமையிலான டெஸ்ட் அணியில் விளையாட இங்கிலாந்து செல்லும் 3 இளம் இந்திய வீரர்கள்..!

தினகரன்  தினகரன்
காயம் ஏற்படுத்தும் மாயம்: கோலி தலைமையிலான டெஸ்ட் அணியில் விளையாட இங்கிலாந்து செல்லும் 3 இளம் இந்திய வீரர்கள்..!

கொழும்பு: இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய அணியில் 3 வீரர்கள் காயத்தால் விலகியதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய அணியிலிருந்து 3 இளம் வீரர்கள் இங்கிலாந்து புறப்படுகின்றனர். இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்நாட்டு அணியுடன் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிரன்ட் பிரிட்ஜில் ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்குகிறது. ஆனால், பயிற்சியின் போது இந்திய வீரர்கள் ஷுப்மான் கில், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் 3 பேரும், டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளனர். உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் போட்டியின் போது முழங்கையில் காயம் ஏற்பட்டு இதில் ஷூப்மான் கில் காயமடைந்து தொடரிலிருந்து விலகினார். இங்கிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, ஆவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தனர். இந்த 3 வீரர்களுக்குப் பதிலாக எந்த 3 வீரர்களைத் தேர்வு செய்யலாம் என்று பிசிசிஐ வாரியம் ஆலோசித்து வந்தநிலையில் இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள தவண் தலைமையிலான இந்திய அணியிலிருந்து 3 வீரர்களை இலங்கை அனுப்ப பிசிசிஐ வாரியம் முடிவு செய்துள்ளது. இது குறித்து பிசிசிஐ வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ இங்கிலாந்து பயணத்தில் கில், ஆவேஷ்கான், சுந்தர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு தொடரிலிருந்து விலகியுள்ளனர். இவர்கள் 3 பேருக்குப் பதிலாக இலங்கையில் உள்ள இந்திய அணியிலிருந்து 3 வீரர்கள் இங்கிலாந்து அனுப்பப்பட உள்ளனர். இதில் பிரித்வி ஷாவும், சுழற்பந்துவீச்சாளர் ஜெயந்த் யாதவும் செல்கின்றனர். டெஸ்ட் போட்டிக்கு முதல்முறையாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடர் முடிந்தவின் இவர்கள் 3 பேரும் இங்கிலாந்து புறப்படுவார்கள். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” எனத் தெரிவித்தார்.

மூலக்கதை