பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.7 ஆகப் பதிவு

தினமலர்  தினமலர்
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.7 ஆகப் பதிவு

மணிலா: பிலிப்பைன்சின் கலடாகன் பகுதிக்கு தென்மேற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.


இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளதாவது:பிலிப்பைன்சின் கலடாகன் பகுதிக்கு தென்மேற்கே நேற்று இரவு 8:49 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆகப் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 116 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.


நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை