ஒலிம்பிக் ஹாக்கி; நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

தினமலர்  தினமலர்
ஒலிம்பிக் ஹாக்கி; நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

டோக்கியோ: ஜப்பானில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் நேற்று கோலாகலமாக துவங்கியது. வண்ண கண்கவர் கலைநிகழ்ச்சிகள் இவ்விழாவில் இடம்பெற்றன. இந்தியா ஹாக்கி போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.


சீனா முதல் தங்கம்



கோவிட் பாதிப்பு இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் காரணமாக பெரும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. முதல் நாள் ஆட்டத்த்தில் மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கிச்சடுல் போட்டி நடந்தது. இதில் சீன வீராங்கனை யாங் வெற்றி பெற்றார். அனஸ்டாசியா ( ரஷ்யா ) 2வது இடத்தையும், நினாகிறிஸ்டன் ( சுவிஸ் ) 3 வது இடத்தையும் கைப்பற்றினர்.


இந்தியா ஹாக்கி அணியினர் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 3-2 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வீழ்த்தியுள்ளது. வில்வித்தை கலப்பு இரட்டையர் கால் இறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

மூலக்கதை