ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: பதக்க வாய்ப்பை தவற விட்ட இளவேனில், சவுரப் சவுத்ரி

தினமலர்  தினமலர்
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: பதக்க வாய்ப்பை தவற விட்ட இளவேனில், சவுரப் சவுத்ரி

டோக்கியோ : ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் இன்று நடந்த தகுதி சுற்று போட்டியில், இந்தியாவின் இளவேனில், சவுரப் சவுத்ரி முறையே 16, 36வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேற தவறினர்.

ஜப்பான் ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் இந்தியா சார்பில் 15 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். ரியோ ஒலிம்பிக்கில் பெரிய ஏமாற்றம் கிடைத்தது. இம்முறை இப்படி நடக்காது, எப்படியும் இரண்டு அல்லது அதற்கும் மேல் என்ற எண்ணிக்கையில் பதக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

பெண்கள் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் 'நம்பர்-1' வீராங்கனை, இந்தியாவின் இளவேனில், மூன்று முறை உலக கோப்பை தங்கம் வென்ற அபுர்வி சண்டேலா, பங்கேற்றனர். அவர்கள் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளவேனில் 626.5 புள்ளிகள் மட்டுமே எடுத்து 16வது இடம் பிடித்தார். 621.9 புள்ளிகள் எடுத்த அபுர்விக்கு 36வது இடம் கிடைத்தது. 'டாப்-8' மட்டுமே பைனலுக்கு முன்னேறுவார்கள் என்பதால், இருவரும் பதக்க கனவை தவற விட்டனர்.

இப்பிரிவில், நார்வே வீராங்கனை ஜெனட் ஹெக் (632.9) முதலிடமும், தென்கொரியாவின் பார்க ஹேமன் (631.7) இரண்டாவது இடமும், அமெரிக்காவின் மேரி டக்கர் (631.4) மூன்றாவது இடமும் பிடித்தனர்.

மூலக்கதை