ஆடவர் ஹாக்கியில் இந்தியா வெற்றி: நியூசிலாந்தை வீழ்த்தியது

தினகரன்  தினகரன்
ஆடவர் ஹாக்கியில் இந்தியா வெற்றி: நியூசிலாந்தை வீழ்த்தியது

ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கியில், இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. இவை தலா 6 அணி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் உள்ளன. பி பிரிவில் நெதர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, கனடா, ஜெர்மனி இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று போட்டிகள்இன்று முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. இரு பிரிவிலும் முதல்4 இடம் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். காலிறுதி ஆக.1, அரையிறுதி ஆக.3 மற்றும் வெண்கலம், தங்கப் பதக்கத்துக்கான போட்டிகள் 5ம் தேதி நடைபெறும். இந்திய ஆடவர் அணிதனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை இன்று எதிர்கொண்டது. ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே நியூசிலாந்து கோல் அடித்து முன்னிலை பெற்றது. அந்த அணியின் கேன் ரஸ்சல் கோல் முதல்கோலைஅடித்தார். இதற்குபதிலடியாக 10வது நிமிடத்தில் இந்தியாவின் ரூபீந்தர் பால் கோல் அடித்து சமன் செய்தார். தொடர்ந்து 26மற்றும் 33வது நிமிடத்தில் இந்தியாவின்ஹர்மன்பிரீத் சிங் கோல் அடிக்க3 -1 என முன்னிலை பெற்றது. 43வது நிமிடத்தில்நியூசிலாந்து அணி கோல் அடித்தது. கடைசி நேரத்தில் நியூசிலாந்து 2 பெனால்டிக் ஹார்னர் வாய்ப்புகளை இந்திய கோல் கீப்பர் ஜேஸ் தடுத்தார். முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது. மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா 5-3 என ஜப்பானை வீழ்த்தியது. இந்திய அணி அடுத்த போட்டியில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.ஜூடோவில் தோல்விஜூடோவில் முதல் சுற்றில் மகளிர் 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சுசீலா தேவி, ஹங்கேரியின் செர்னோவிக்சியை எதிர்கொண்டார். இதில் சுசீலா தேவி தோல்வி அடைந்து வெளியேறினார்.

மூலக்கதை