குழந்தைகளுக்கான முதல் தடுப்பூசி: 'மாடர்னா' நிறுவனத்துக்கு பெருமை

தினமலர்  தினமலர்
குழந்தைகளுக்கான முதல் தடுப்பூசி: மாடர்னா நிறுவனத்துக்கு பெருமை

லண்டன்: ஐரோப்பிய யூனியன் நாடுகளில் 12 - 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியாக மாடர்னா நேற்று பரிந்துரைக்கப்பட்டது. இதனால் உலகில் குழந்தைகளுக்கான முதல் தடுப்பூசி என்ற பெருமை அதற்கு கிடைத்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கான மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் 12 - 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியாக மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்த நேற்று பரிந்துரை செய்யப்பட்டது.இதன்படி சர்வதேச அளவில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தடுப்பூசியாக மாடர்னா மாறியுள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனம் கூறியதாவது:ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்படும் மாடர்னா தடுப்பூசி 12 - 17 வயதிற்கு உட்பட்ட, 3,700க்கும் மேலானோரிடம் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவர்கள் உடலில் போதிய கொரோனா எதிர்ப்பு சக்தி உருவானது.இதனால் ஐரோப்பிய யூனியன் முழுதும் 12 - 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை