தாலிபான் கூறுவது அப்பட்டமான பொய்: ஆப்கன் அமைச்சர் தகவல்

தினமலர்  தினமலர்
தாலிபான் கூறுவது அப்பட்டமான பொய்: ஆப்கன் அமைச்சர் தகவல்

காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக தாலிபான் பயங்கரவாதிகள் ஊடுருவல் ஈடுபட்டு வருகின்றனர். தாலிபான் பயங்கரவாத அமைப்பு 90 சதவீத இடங்களை ஆக்கிரமித்து உள்ளதாக முன்னதாக தெரிவித்திருந்தது. இது அப்பட்டமான பொய் என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை துணை செய்தித் தொடர்பாளர் பவாத் ஆமன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டி அளித்துள்ளார்.


ஆப்கானிஸ்தான் நாட்டை முழுவதுமாக ஆக்கிரமிக்கும் முனைப்பில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு எல்லை மாகாணங்களைக் கைப்பற்றி வருவதாகவும் தெருக்களில் துப்பாக்கி ஏந்தியபடி சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருப்பதாகவும் அந்நாட்டு குடிமக்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.


சர்வதேச அளவில் ஈரான், ஈராக் சரியா உள்ளிட்ட பல நாடுகளை அச்சுறுத்திவரும் தாலிபான் அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு மறைமுகமாக உதவி வருவதாக ஆப்கன் அரசு குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை