‘ஸ்டார்ட் அப்’ ஆதார நிதி போட்டிக்கான அழைப்பு

தினமலர்  தினமலர்
‘ஸ்டார்ட் அப்’ ஆதார நிதி போட்டிக்கான அழைப்பு

சென்னை:தமிழகத்தில், 20 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் ஆதார நிதி வழங்கும் போட்டியில் பங்கு பெற, ‘தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் புத்தாக்க இயக்கம்’ அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து, இதன் திட்ட இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக ஸ்டார்ட் அப் மற்றும் புத்தாக்க தொழில் கொள்கையில், தொழிலுக்கு தேவையான ஆரம்பகட்ட ஆதார நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டது.இதன்படி, ‘டான்சீட்’ எனும் ஸ்டார்ட் அப் ஆரம்பகட்ட ஆதார நிதி சவாலுக்கான முதல் போட்டி, பிப்ரவரியில் நடந்தது.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நிறுவனங்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி, ஜூலை முதல் செப்டம்பர் வரை நடத்த திட்டமிட பட்டு உள்ளது. இதில், 20 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க, www.startuptn.in என்ற இணையதளம் வாயிலாக, ஆக., 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ‘ஸ்டார்ட்அப் இந்தியா’ மற்றும் ‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு’ ஆகியவற்றில் பதிவு செய்த நிறுவனங்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை