தொடர்ந்து அதிகரிக்கும் ஏற்றுமதி

தினமலர்  தினமலர்
தொடர்ந்து அதிகரிக்கும் ஏற்றுமதி

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து, ஏழாவது மாதமாக அதிகரித்து வருகிறது. நடப்பு மாதத்தில், 21ம் தேதி வரையிலான காலத்தில், 45.13 சதவீதம் அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மதிப்பு 1.69 லட்சம் கோடி ரூபாய். ஏற்றுமதியை போலவே, இறக்குமதியும் அதிகரித்து உள்ளது. 64.82 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு, 2.38 லட்சம் கோடி ரூபாய். இதையடுத்து, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 69 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை