இரண்டாவது ஒருநாள் ஒத்திவைப்பு | ஜூலை 23, 2021

தினமலர்  தினமலர்
இரண்டாவது ஒருநாள் ஒத்திவைப்பு | ஜூலை 23, 2021

பிரிட்ஜ்டவுன்: விண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. பிரிட்ஜ்டவுனில் 2வது போட்டி நடக்க இருந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா ‘பேட்டிங்’ தேர்வு செய்தது. 

போட்டி துவங்குவதற்கு முன், விண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. உடனடியாக போட்டி ஒத்திவைக்கப்பட்டு, வீரர்கள், போட்டி நடுவர் குழுவினர் அனைவரும் ஓட்டலுக்கு திரும்பினர். அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகளின் அடிப்படையில் 2வது போட்டி எப்போது நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படும்.

மூலக்கதை