ஜிம்பாப்வே பதிலடி: வங்கதேசம் ஏமாற்றம் | ஜூலை 23, 2021

தினமலர்  தினமலர்
ஜிம்பாப்வே பதிலடி: வங்கதேசம் ஏமாற்றம் | ஜூலை 23, 2021

ஹராரே: வங்கதேசத்துக்கு எதிரான 2வது ‘டுவென்டி–20’ போட்டியில் எழுச்சி கண்ட ஜிம்பாப்வே அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே சென்றுள்ள வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வங்கதேசம் வென்றது. ஹராரேயில் 2வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லே (73), ரியான் பர்ல் (34*) கைகொடுக்க, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன் எடுத்தது.

சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு முகமது நைம் (5), சவுமியா சர்க்கார் (8), கேப்டன் மகமதுல்லா (4), சாகிப் அல் ஹசன் (12) ஏமாற்ற, 19.5 ஓவரில் 143 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. அதிகபட்சமாக ஷமிம் ஹொசைன் 29 ரன் எடுத்தார். இதனையடுத்து தொடர் 1–1 என, சமநிலை அடைந்தது.

மூலக்கதை