'அம்னெஸ்டி' அடிக்கும் தொடர் 'பல்டி'

தினமலர்  தினமலர்
அம்னெஸ்டி அடிக்கும் தொடர் பல்டி

இந்திய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், இதர பிரபலங்களின் போன்களை ஒட்டு கேட்க, 'பெகாசஸ்' மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக, குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதன் உண்மை தன்மை பற்றி கேள்வி எழுந்தவுடன், இத்திட்டத்தோடு தொடர்புடைய, 'அம்னெஸ்டி இன்டர்நேஷனல்' அமைப்பு, தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக, அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ., நிறுவனத்தின் வேவு மென்பொருளே, பெகாசஸ். என்.எஸ்.ஓ., இந்த மென்பொருளை, அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்யும் என்ற நிலையில், அந்த மென்பொருளைப் பயன்படுத்தி, பல நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் பேரின், மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்தியாவில் 300 போன்கள் எண்களும், இதில் இடம்பெற்றுஉள்ளன, அதில் 40 பத்திரிகையாளர்களின் போன்களும் அடக்கம். ஆனால், அடிப்படையில் பல கேள்விகள் எழுகின்றன. எங்கிருந்து இந்த 50 ஆயிரம் எண்கள் வெளியே வந்தன; யார் வெளியிட்டது; அதன் உண்மை தன்மை என்ன? முக்கியமாக, சர்வதேச அளவில் புகழ்பெற்ற 17 ஊடக நிறுவனங்கள், இந்த ஒட்டு கேட்பு விவகாரத்தை வெளிக்கொண்டு வந்துள்ளன.

அடிப்படையே இல்லை


இது, என்.எஸ்.ஓ., வாடிக்கையாளர்களுக்கு, அதாவது பல நாடுகளுக்கு முக்கியமான எண்களாக இருக்கக்கூடிய பட்டியல் என்று தான், அம்னெஸ்டியும், புலனாய்வு பத்திரிகையாளர்களும், அவர்கள் பணியாற்றும் ஊடகங்களும், மிகத் தெளிவான மொழியில் தெளிவுபடுத்தியுள்ளன.இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், ஆர்வம் காட்டக்கூடியவர்களின் உத்தேசப் பட்டியலாக இது இருக்கலாம். அவர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் எதிரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் இதரரை வேவு பார்ப்பதில் முன்னர் ஆர்வம் காட்டியுள்ளனர்.அதாவது, 17 சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட போன் எண்கள் என்பவை, பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டக்கூடியவர்களின், உத்தேச பட்டியல் தான்.இவ்வாறு தெரிவித்து, அம்னெஸ்டி இன்டர்நேஷனல், 'பல்டி' அடித்தது.இதனால், பல்வேறு நாடுகளில் நடைபெறும் கருத்து மோதல்களில், ஒரு அர்த்தமும் இல்லை. அதற்கு அடிப்படையே இல்லை என்பது
தெளிவாகியுள்ளது.

சந்தேகம்



இந்த ஹீப்ரு மொழி பத்திரிகை செய்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, சர்வதேச ஊடகங்களில் வெளியானவுடன், மீண்டும் ஒருமுறை, 'பல்டி' அடித்துள்ளது, அம்னெஸ்டி இன்டர்நேஷனல்.'பழைய குருடி கதவைத் திறடி' என்பது போல், மீண்டும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள, 'டுவிட்டர்' செய்தியில், பெகாசஸ் திட்டத்தின் கண்டுபிடிப்புகளை, தாங்கள் முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்து உள்ளது.இப்படிப்பட்ட முரண்பட்ட செய்திகளாலும், நிலைப்பாடுகளும், அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் நேர்மை சந்தேகத்துக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கின்றனர், பல்வேறு சமூக ஆர்வலர்கள்.-- நமது நிருபர் - -

மூலக்கதை