9 தலிபான் பயங்கரவாதிகள் அறிவிப்பு

தினமலர்  தினமலர்
9 தலிபான் பயங்கரவாதிகள் அறிவிப்பு

காபூல்:ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வேகமாக வெளியேறி வரும் நிலையில், அந்நாட்டின் 90 சதவீத பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தலிபான் பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன. இதையடுத்து, அங்கு தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது. சமாளிக்க முடியவில்லைஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நோக்கில், ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை தலிபான்கள் அதிகரித்துள்ளனர்.

ஆப்கன் ராணுவத்தால் தலிபான் பயங்கரவாதிகளை சமாளிக்க முடியவில்லை. இந்நிலையில், தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் 90 சதவீத பகுதிகளை கைப்பற்றி விட்டோம். தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மினிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுடனான ஆப்கன் எல்லைப் பகுதிகள் அனைத்தும் இப்போது எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை உடனடியாக கைப்பற்ற விரும்பவில்லை.

அதிபர் அஷ்பர் கனி பதவி நீக்கம் செய்யப்பட்டு, புதிய அரசு அமையும் வரை ஆப்கனில் அமைதி ஏற்படாது.ஆப்கனில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை காலுான்ற அனுமதிக்க மாட்டோம். வேறு எந்த வெளிநாட்டு ராணுவமும் ஆப்கனில் நுழைவதையும் அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, அமெரிக்க ராணுவத்துக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு வந்த ஆப்கனைச் சேர்ந்த சோஹைல் பார்டீசின் தலையை வெட்டி, தலிபான் பயங்கரவாதிகள் கொலை செய்தனர்.

ஜெய்சங்கருடன் சந்திப்பு

இந்நிலையில், ஆப்கனின் அமைதிக்கான தேசிய நல்லிணக்க உயர்மட்டக்குழு தலைவர் அப்துல்லா அப்துல்லா, நம் நாட்டிற்கு வந்துள்ளார்.டில்லியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அப்துல்லாவை சந்தித்து பேசினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள 'டுவிட்டர்' பதிவில், 'அப்துல்லாவின் எண்ணங்கள் மற்றும் கருத்துகள், நம்முடனான உறவுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. இச்சந்திப்பின் வாயிலாக, ஆப்கனில் நடைபெறுவதை முழுமையாக அறிய முடிந்தது' என கூறி உள்ளார்.

மூலக்கதை