கோவை கலக்கல் வெற்றி | ஜூலை 23, 2021

தினமலர்  தினமலர்
கோவை கலக்கல் வெற்றி | ஜூலை 23, 2021

சென்னை: திருச்சிக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் ஸ்ரீதர் ராஜு, சுதர்சன் அரைசதம் கடந்து கைகொடுக்க கோவை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னையில், தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 5வது சீசன் நடக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் கோவை, திருச்சி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த திருச்சி அணிக்கு அமித் சாத்விக் (42), நிதிஷ் ராஜகோபால் (45), சுமந்த் ஜெயின் (29) கைகொடுக்க, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன் குவித்தது.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கோவை அணிக்கு கவின் (11) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய கங்கா ஸ்ரீதர் ராஜு, 52 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 74 ரன் விளாசினார். மறுமுனையில் அசத்திய சாய் சுதர்சன் தன்பங்கிற்கு அரைசதம் கடந்து வெற்றிக்கு கைகொடுத்தார். கோவை அணி 18.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 175 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சுதர்சன் (57), கேப்டன் ஷாருக்கான் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை