இங்கிலாந்து அணியில் மீண்டும் ராபின்சன்

தினகரன்  தினகரன்
இங்கிலாந்து அணியில் மீண்டும் ராபின்சன்

லண்டன்: இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில், முதல் 2 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ட்விட்டரில் இனவெறியுடன் தகவல் பதிந்ததாக சர்ச்சையில் சிக்கியதால் தடை விதிக்கப்பட்டிருந்த வேகப் பந்துவீச்சாளர் ஆலிவர் ராபின்சன், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, டொமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராடு, ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஸாக் கிராவ்லி, சாம் கரன், ஹசீப் ஹமீத், டேன் லாரன்ஸ், ஜாக் லீச், ஓல்லி போப், ஓல்லி ராபின்சன், டொமினிக் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட்.

மூலக்கதை