கழுதை, நாய், பன்றியின் பெயரில் ஆபாச படங்களை பார்ப்பதில் பாக். நம்பர் ஒன்: இந்தியாவுக்கு 6வது இடம்

தினகரன்  தினகரன்
கழுதை, நாய், பன்றியின் பெயரில் ஆபாச படங்களை பார்ப்பதில் பாக். நம்பர் ஒன்: இந்தியாவுக்கு 6வது இடம்

புதுடெல்லி: உலகின் பல நாடுகளில் ஆபாச திரைப்படங்கள் பார்ப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், ஆபாச திரைப்படங்களை பார்ப்பதற்கு பல நாடுகள் அனுமதி அளித்துள்ளன. அதன்படி அதிக ஆபாச திரைப்படங்களைப் பார்க்கும் நாடுகளில் பாகிஸ்தான், சீனாவின் பெயர்கள் முன்னணியில் உள்ளன. கூகிளின் கூற்றுப்படி, ஆபாச திரைப்படங்களைப் பார்க்க விரும்பும் பயனர்கள், விலங்குகளின் பெயரில் இணையத்தில் ஆபாச படங்களை தேடுகின்றனர். குறிப்பாக கழுதை, நாய், பன்றி என்ற பெயரில் தேடுகின்றனர். இந்நிலையில், வென்சன் பார்ன் ஃபார் ப்ளூ கோட் என்ற ஆராய்ச்சி நிறுவனம் உலகளவில் ஆபாச திரைப்படங்கள் அதிகம் பார்க்கும் நாடுகளின் பட்டியலை சேகரித்து வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், பெரும்பான்மையான நாடுகளின் ஊழியர்கள் இன்னும் ஆபாச வலைத்தளங்களைப் பார்வையிடுகிறார்கள். சீன தொழிலாளர்களில் சுமார் 19 சதவீதம் பேர் தங்களது பணி நேரத்தில் ஆபாச வலைத்தளங்களைப் பார்வையிடுகிறார்கள். அந்த வகையில் மெக்சிகோ இரண்டாவது இடத்திலும், பிரிட்டன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஈரானில் ஆபாசப் படங்களை அதிக அளவில் பார்வையாளர்களில் 35 வயதுக்குக் குறைவானவர்கள் என்றும், மெக்ஸிகோவில் ஆபாச திரைப்படங்களைப் பார்ப்பவர்களில் பெரும்பாலோர் இதே வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். ஆபாச திரைப்படங்களைப் பார்க்கும் உலகின் முதல் 10 நாடுகளில் பாகிஸ்தான், எகிப்து, வியட்நாம், ஈரான், மொராக்கோ, இந்தியா, சவுதி அரேபியா, துருக்கி, பிலிப்பைன்ஸ், போலந்து ஆகிய வரிசையின் அடிப்படையில் பட்டியல் நீள்கிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை