சிறப்பாக பணிபுரிந்தால் ‘பென்ஸ்’ கார் பரிசு

தினமலர்  தினமலர்
சிறப்பாக பணிபுரிந்தால் ‘பென்ஸ்’ கார் பரிசு

புதுடில்லி:–மிகச் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு,‘மெர்சிடிஸ் பென்ஸ்’ காரை பரிசாக வழங்க, ‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரை, தற்போது நிர்வாக குழுவின் அனுமதிக்காக காத்திருக்கிறது.

இது குறித்து நிறுவனத்தின் தலைமை மனிதவளத் துறை அதிகாரி அப்பாராவ் கூறியதாவது: நிறுவனத்தில் சிறப்பாக பணிபுரிபவர்களுக்காக, இது போன்று பரிசுகள் வழங்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2013ல், சிறப்பாக பணியாற்றிய 50 பேர்களுக்கு, மெர்சிடிஸ் பென்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த நடைமுறை பின்னர் நின்றுபோய்விட்டது.

தற்போது மீண்டும் இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். நிர்வாக குழுவின் அனுமதி கிடைத்த பின் இது நடைமுறைக்கு வரும்.ஒரு வேலையில், வேறு ஒருவரை நியமிப்பதற்கு, 15 -– 20 சதவீதம் வரை அதிகம் செலவாகிறது. அதனால், எங்கள் ஊழியர்களை திறன் மிகுந்தவர்களாக மாற்றுவதில், அதிக கவனம் எடுத்து வருகிறோம். ‘கிளவுடு’ உள்ளிட்ட சில பிரிவுகளில் ஆட்களை பணியமர்த்துவதற்கு அதிகம் செலவு பிடிக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை