‘ஹால்மார்க்’ முத்திரை குறித்து உலா வரும் தவறான தகவல்

தினமலர்  தினமலர்
‘ஹால்மார்க்’ முத்திரை குறித்து உலா வரும் தவறான தகவல்

புதுடில்லி:கடந்த 16ம் தேதியிலிருந்து, நாட்டில் உள்ள பல மாநிலங்களில், தங்க நகைகளை விற்பதற்கு, ‘ஹால்மார்க்’ முத்திரை பெறுவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த அறிவிப்பை அரசு வாபஸ் பெற்றுவிட்டதாக, சில சமூக ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன.இதையடுத்து, சமூக ஊடகங்களில் தவறாக தகவல் பரப்பப்படுகிறது என்றும், ஹால்மார்க் முத்திரை பெறுவது கட்டாயம் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைகளுக்கு, ‘ஹால்மார்க்’ முத்திரையை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இத்திட்டத்தை நாடு முழுக்க, பலகட்டங்களில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக, 16ம் தேதியிலிருந்து, 28 மாநிலங்களில் இருக்கும், 256 மாவட்டங்களில், ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இம்மாவட்டங்களில், ஹால்மார்க் முத்திரை பெறாமல் நகைகளை விற்பனை செய்ய முடியாது. ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய, 14, 18 மற்றும் 22 காரட் தங்க நகைகளை மட்டுமே விற்க இயலும்.இந்த பட்டியலில் தமிழகத்தில் மட்டும், 24 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

மூலக்கதை