'நதிகளிலே நீராடும் சூரியன்' பட வேலைகள் இன்று ஆரம்பம்

தினமலர்  தினமலர்
நதிகளிலே நீராடும் சூரியன் பட வேலைகள் இன்று ஆரம்பம்

'விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு கௌதம் மேனன் - சிலம்பரசன் இணையும் படம் 'நதிகளிலே நீராடும் சூரியன்'. இப்படத்திற்கான வேலைகள் இன்று முதல் ஆரம்பமாகிவிட்டன. படத்திற்கான போட்டோஷுட் இன்று நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி படத்தைத் தயாரிக்கும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆனால், சிம்பு தற்போது நடித்து முடித்திருக்கும் 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

“டியர் எஸ்டிஆர் ரசிகர்களே, மாநாடு படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் சந்திப்போம். அடுத்த படம் ஆரம்பமாகிவிட்டது. இனிமேல், ஐசரிகணேஷ் அண்ணன் அப்டேட் கொடுப்பார். அண்ணனை பாலோ பண்ணுங்க. ஐசரிகணேஷ் அண்ணன், தம்பி சிலம்பரசன், கௌதம் மேனன் சாருக்கு வாழ்த்துகள். இனி, தம்பி சிலம்பரசன் அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய நாளே. இன்று 'நதிகளிலே நீராடும் சூரியன்' போட்டோ ஷுட்டுடன் ஆரம்பமாகிறது,” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை