வங்கி நகை மதிப்பீட்டாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி

தினமலர்  தினமலர்
வங்கி நகை மதிப்பீட்டாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில், மார்ச் மாதத்தில் இருந்து நகைக்கடன் வழங்கப்படாததால், 52 கிளைகளில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர்கள், ஐந்து மாதங்களாக வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர்.காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி புரம் மாவட்டங்களில், 52 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இதன் கிளைகளில், நகை அடகு வைக்கும்போது, நகை மதிப்பீட்டாளர்கள் பரிசோதனை செய்து, நகைக்கடன் வழங்குவர்.நகைக்கடன் வைப்பதில் கிடைக்கும் கமிஷனே, இவர்களின் மாத சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல், ஜூலை வரை என, வங்கியில் பணம் இல்லாதது, நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு, பிற வங்கியைவிட 1 சதவீதம் வட்டி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், ஐந்து மாதங்களாக நகை அடகு வைக்கவும், நகைகளை மீட்கவும் யாரும் வரவில்லை.இதனால், நகை மதிப்பீட்டாளர்களுக்கு வங்கி நிர்வாகம் சம்பளம் வழங்காததால், 52 நகை மதிப்பீட்டாளர்களின் வாழ்வதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.எனவே, கருணை அடிப்படையில், ஐந்து மாதங்களுக்கான சம்பளம் வழங்கவும், வட்டி விகிதம் குறைக்கவும், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகை மதிப்பீட்டாளர்கள்கோரிக்கை விடுத்துஉள்ளனர்.\ - நமது நிருபர் -

மூலக்கதை