'லவா' ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தினமலர்  தினமலர்
லவா ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பள்ளிப்பட்டு--கொசஸ்தலை ஆற்றின் மூல நதிகளான லவா, குசா ஆறுகளில், தற்போது லவா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்து வருகிறது. இதனால், கரையோர விவசாயிகள்மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.பள்ளிப்பட்டு நகரில் உருவாகும் கொசஸ்தலை ஆற்றுக்கு, லவா, குசா நதிகளில் இருந்து தண்ணீர் வரத்து உள்ளது. ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதியில் இருந்து, லவா, குசா நதிகள் உருவாகின்றன.லவா நதிக்கு, புல்லுார் காட்டில் இருந்தும், குசா நதிக்கு, கிருஷ்ணாபுரம் அணைக்கட்டில் இருந்தும் தண்ணீர் வரத்து உள்ளது.நீர்மட்டம் உயர்வுதற்போது, புல்லுார் காட்டில் இருந்து நீர்வரத்து துவங்கியுள்ளதால், லவா ஆற்றில் வெள்ளம் பாய்ந்து வருகிறது. ஆந்திராவில் இருந்து, பள்ளிப்பட்டு அடுத்த சாணாகுப்பம் அருகே, லவா ஆறுதமிழகத்திற்குள் பாய்கிறது.இது, வெங்கல்ராஜிகுப்பம், திருமலைராஜிபேட்டை வழியாக, பள்ளிப்பட்டு அருகே, கொசஸ்தலையில் கலக்கிறது.சித்துார் மாவட்டத்தில், சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், லவா நதியில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கிருஷ்ணாபுரம் அணைக்கட்டிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.விவசாயிகள் மகிழ்ச்சிஇதனால், விரைவில் குசா நதியிலும் நீர்வரத்து துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. லவா நதியில் வெள்ளம் பாய்ந்து வரும் நிலையில், குசா நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், கொசஸ்தலை கரை புரளும் என்பது நிச்சயம்.இதனால், கரையோர பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மூலக்கதை