'டெல்டா' வகை கொரோனா ; ஜோ பைடன் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
டெல்டா வகை கொரோனா ; ஜோ பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று, ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில், அமைச்சரவைக் குழுவின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.


இதில், ஜோ பைடன் பேசியதாவது: மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தப்படுவதால், கடந்த ஆறு மாதங்களில் கொரோனா நோயாளிகள் இறப்பு, 90 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம், கொரோனாவின் உருமாறிய 'டெல்டா' வைரஸ் வேகமாக பரவி வருவது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதனால், தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தான், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அதுபோல, தடுப்பூசி செலுத்த தவறியோர் தான் இறக்கின்றனர்.


எனவே, அடுத்த கட்டமாக, தடுப்பூசி போடாமல் உள்ளோருக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை நோக்கி செயல்பட வேண்டும். மக்கள் எச்சரிக்கை உணர்வுடன், தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை